திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பகுதியில், அன்னதானம் செய்வதை பரிகாரமாக கருதி கடைகளில் இருந்து பொட்டலங்களை வாங்கி ஏழைகளுக்கு பக்தர்கள் விநியோகிப்பது வழக்கம்.
அப்படி விநியோகிக்கப்படும் அதே உணவுப் பொட்டலங்களை கடைக்காரர்களே ஏழைகளிடம் இருந்து விலைக்கு வாங்கி, நாள்பட்ட உணவை மீண்டும் விற்பதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அன்னதானத்திற்கென வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன உணவு பொட்டலங்களை கைப்பற்றி அழித்தனர்.