ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள மேலப்பாளையத்தில் 1756ஆம் ஆண்டு பிறந்த தீரன் சின்னமலை ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து மைசூரை ஆண்ட மன்னர் திப்புசுல்தானுடன் இணைந்து போரிட்டார்.
திப்பு சுல்தான் இறந்தபிறகு, சிவன் மலைப் பகுதியில் கோட்டை ஒன்றை கட்டிய தீரன் சின்னமலை அங்கு இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தார். 1801, 1802 மற்றும் 1802ஆம் ஆண்டு நடந்த போர்களில் ஆங்கிலேயரை தீரன் சின்னமலை தோற்கடித்தார்.
அவரது சமையல்காரராக இருந்த நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகளை கூறி அவன் மூலம் தீரன் சின்னமலையை பிடித்த ஆங்கிலேயர்கள் 1805ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு தினம் அன்று சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டையில் தூக்கிலிட்டனர். ஆடிப்பெருக்கு தினத்தன்று தீரன் சின்னமலையின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த வகையில், சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தீரன்சின்னமலையின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.