திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் அமைந்துள்ள உபரி நீர் வடிகாலில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்ளமோ பொறியாளர் மணிகண்டன், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
20 அடி நீள அலுமினிய ஸ்கேலால் அவர் அளவு எடுத்துக்கொண்டிருந்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில், ஸ்கேல் உரசி, உடலில் மின்சாரம் பாய்ந்து மணிகண்டன் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
அருகே இருந்த மற்றொரு பணியாளரான தங்கபாண்டி, மணிகண்டனை காப்பாற்ற முயன்றபோது அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்