சென்னை பெரியமேட்டில், தன்னை விட வயதில் மூத்த கல்லூரி மாணவி, காதலிக்க மறுத்ததால் , அவரை பழி வாங்க, ஆன்லைனில் ஏராளமான பொருட்களை Cash on Delivery முறையில் மாணவியின் வீட்டிற்கே அனுப்பி தொல்லை கொடுத்ததாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
21 வயது கல்லூரி மாணவியிடம் டியூசனுக்கு சென்றபோது அத்துமீறிய சிறுவனை கண்டித்து வீட்டில் இருந்து வெளியேற்றி உள்ளனர்.
இதையடுத்து அமேசான், flipkart, swiggy, zomatoமூலம் ஏராளமான பொருட்களையும், ஓலா, ஊபர் மூலம் 77 வாகனங்களையும் புக் செய்து மாணவியின் வீட்டிற்கு அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார்.
அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், ஆன் லைன் ஐ.பி. அட்ரஸ்ஸை வைத்து சிறுவனை அடையாளம் கண்டு பிடித்த சைபர் கிரைம் போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி அவனை எச்சரித்து பெற்றோர் உடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.