கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர்.
பானி பூரி மற்றும் மசாலா காளான் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக எடுத்துச் சென்றனர்.
பானிபூரி விற்பவர்கள் வாயில் பாக்கு போன்றவற்றை போட்டுக் கொண்டு விற்பனை செய்யக்கூடாது என்றும் சில வடமாநில பானிபூரி விற்பனையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்