தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட தனது 83 சென்ட் நிலத்தை 88 வயது மூதாட்டி ஒருவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டார்.
தனது விவசாய நிலம் தனக்கே தெரியாமல் தனியார் அனல்மின் நிலையத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து ஏ.எம்.பட்டி பகுதியைச் சேர்ந்த மாடத்தி அம்மாள் என்பவர், மாவட்ட பதிவாளரிடம் புகாரளித்தார்.
விசாரணை நடத்தி, அந்த இடம் மாடத்தி அம்மாளுக்கு சொந்தம் என உத்தரவிடப்பட்ட நிலையில், நிறுவனம் சார்பில் செய்யப்பட்ட பல்வேறு மேல்முறையீடுகளிலும் இடம் மாடத்தி அம்மாளுக்கே சொந்தம் என உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த இடத்தை வருவாய்த்துறையினர் மீட்டு மாடத்தி அம்மாள் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுத்தனர்.