நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் இரவு வான்பூங்கா அமைக்கப்படும் என வனத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 2ஆவதாக அமைய உள்ள வான்பூங்கா இரவு நேர விலங்குகளுக்கு இணக்கமான பூங்காவாக இருக்கும் என்றும் ஒளி மாசுபாட்டை குறைத்து இரவு வானத்தில் நட்சத்திரங்களை பார்ப்பதை அதிகரிக்கிறது என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிழக கடற்கரை பகுதிகளில் ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு வருடத்திற்கு 1 கோடி ரூபாய் செலவில் ஆமை பாதுகாவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள உயர்பயிற்சியக மரபியல் பிரிவில் பூர்வீக இன விதை பெட்டகம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.