விஷ சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, விஷ சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிபிஐ விசாரணை தேவை என்று வலியுறுத்தி தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க நேரம் கேட்டுள்ளதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.