சென்னை தாம்பரம் அருகே சேலையூர் பகுதியில், வெல்டிங் வேலையின் போது ஏற்பட்ட தீப்பொறி அருகில் இருந்த மெத்தை தயாரிக்கும் கடையில் வைக்கப்பட்டிருந்த பஞ்சில் விழுந்ததால், 3 கடைகள் தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது.
பி.ஆர்.எஸ் பிரியாணி கடை மற்றும் ஆரோக்கிய பேக்கரி கடைக்கு நடுவில் இருக்கும் மெத்தை தயாரிக்கும் கடையில் பற்றிய தீ, அருகில் இருந்த 2 கடைகளுக்கும் பரவியுள்ளது.
தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த நிலையில், உணவகத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏதும் இல்லை எனவும், தீ விபத்து குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.