புகார் அளித்த பெண்ணிடம் சிஎஸ்ஆர் போட 2 ஆயிரம் ரூபாயை Gpay செய்யுமாறு பூவிருந்தவல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் இந்துராணி லஞ்சம் கேட்கும் ஆடியோ வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த திவ்யா என்பவர், கணவர் கொடுமை செய்வதாக அளித்த புகாருக்கு சி.எஸ்.ஆர். கொடுக்க காவல் ஆய்வாளர் இந்துராணி, 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், வேறு ஒரு தொலைபேசி எண்ணுக்கு பணத்தை போடும்படி வலியுறுத்தியதாகவும் திவ்யா தெரிவித்தார்.