மணல் கடத்தலை தடுக்க முயலும் வி.ஏ.ஓ.க்கள் துப்பாக்கி லைசன்ஸ் பெறும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக அண்ணாமலை கூறினார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், மணல் கடத்தல் கும்பலால் அரசு அதிகாரிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலைமை என்ன என்று வினவினார்.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் ஆதிக்க சாதியாக உள்ள சமூகத்தைச் சேர்ந்தவருக்கு அங்குள்ள பள்ளியில் வேலை தரக் கூடாது என்று நீதிபதி சந்துரு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அண்ணாமலை, ஆசிரியரை சாதி பார்த்து தேர்வு செய்வதோ, சாதி பார்த்து வேலை வழங்குவதோ எப்படி சரியாக இருக்கும் என்று வினவினார்.