ஃப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஃப்ளூகிராஸ் அமைப்புக்கு தமிழக அரசு நிலம் வழங்கியுள்ளதால், அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும், ஃப்ளூகிராஸ் அமைப்பால் பராமரிக்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படாதது ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பெருமளவில் நிதி பெறும் ஃப்ளூகிராஸ்-இன் நிதி விவரங்களை வருமானவரித்துறை மூலம் தணிக்கை செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.