கொடைக்கானலுக்கு வரும் பிரதான சாலைகளான பழனி மற்றும் வத்தலகுண்டு மலைச்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் 8 கோடி ரூபாய் செலவில் உருளை தடுப்பான்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பழனி மற்றும் வத்தலக்குண்டு சாலைகளில் தலா 800 மீட்டர் தூரத்திற்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் உருளை தடுப்பான்கள் அமைக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைச்சாலைகளில் குறுகலாக உள்ள இடங்களை அகலப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.