சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் சாலை நடுவே கால்மேல் கால் வைத்து ஒய்யாரமாக படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்தும் பலன் அளிக்காமல் போன நிலையில் அவ்வழியே வந்த கனரக டேங்கர் லாரி சங்கரின் தலை மீது ஏறி நசுக்கியதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.