கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம், கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்புப் படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒத்திகையின்போது, சந்தேகம்படும்படி கடலில் தென்படும் கப்பல்கள், படகுகள் குறித்து தகவல் தெரிவிக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே சாகர் கவச் ஒத்திகையின் ஒருபகுதியாக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு படகுகளில் ஊடுருபவர்களை கடலோரக் காவல்படையினர் மடக்கிப்பிடித்தனர்.
கடலூரில் படகு மூலம் வெடிகுண்டுகளுடன் ஊடுருவும் தீவிரவாதிகளை சுற்றிவளைப்பது போல் ஒத்திகை நடைபெற்றது.