தனியார் மருத்துவமனையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம், சென்னை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளதைப் போன்று, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே ஒரத்தூரில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களில் 984 பேர் 15 நாட்களில் நியமிக்கப்பட உள்ளதாகவும், மேலும் 2 ஆயிரத்து 553 மருத்துவர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.