திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சமையல் மாஸ்டரை, இரு பெண்கள் சேர்ந்து அடி வெளுத்த சம்பவத்தால் பரபரப்பு உண்டானது. டாஸ்மாக் உபயத்தால் சமையல் சக்கரவர்த்திகள் சண்ட கோழிகளான பின்னணி குறித்து விவரிக்கின்ராது
இரு பெண்கள் தாக்கினாலும் எதிர் தாக்குதல் நடத்தாமல் அமைதியாக அமர்ந்து அடிவாங்கும் இவர் தான் சமையல் மாஸ்டர் சாந்தகுமார்..!
ஜீன்ஸ் போட்ட லேடி ஜேம்ஸ் பாண்டு போல ஒரு பெண், பாய்ந்து, பாய்ந்து தாக்கினாலும் அக்கா.. அக்கா.. என்று அக்கா குருவி போல கூவினாரே தவிர ஒரு அடி கூட திருப்பி அடிக்கவில்லை
அடிப்பது தவறு என்று சேலை கட்டிய பெண் ஒருவர் தடுக்க, அந்த ஆசாமி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக எடுத்து கூறியதும் , அவரும் தன் பங்கிற்கு அந்த ஆசாமிக்கு சில பல உதைகளை விட்டார் .
பேருந்து நிலையத்தில் நடக்கின்ற இந்த சண்டை காட்சிகளை செல்போனில் ஒருவர் படம் பிடித்துக் கொண்டிருக்க அவருக்கும் ஒரு அடி விழுந்தது.
சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் ஒரே சமையல் குழுவை சேர்ந்த மூவரும் ஒரு இடத்தில் ஆர்டர் முடித்து விட்டு கிடைத்த பணத்தை கொண்டு டாஸ்மாக்கில் மூக்கு முட்ட குடித்து விட்டு பேருந்து நிலையம் வந்து படுத்து உறங்கி உள்ளனர். அப்போது ஒரு பெண்ணிடம் சமையல் மாஸ்டர் தவறான செயலில் ஈடுபட்டதால் இருவரும் சேர்ந்து தர்ம அடி கொடுத்ததாகவும், ஏற்கனவே கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்த நிலையில் மாஸ்டரை போட்டு வெளுத்து விட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் முறையான ரோந்து பணியில் ஈடுபடாததால், போதை ஆசாமிகளின் புகழிடமாக மாறிவருவதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர்