கர்நாடக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் குஷ்விந்தர் வோரா, கெலவரப்பள்ளி அணையில் ஆய்வு மேற்கொண்டார்.
நுரை பொங்கி செல்லும் தண்ணீரில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதாகவும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் அவரிடம் புகார் தெரிவித்தனர்.