ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் கடந்த 15 நாட்களில் அடையாளம் தெரியாத மர்ம நோயால் பழங்குடி இனத்தவரைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழப்புக்கு தீவிர வயிற்றுப்போக்கு வாந்தி தான் காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து ஈரோடு மாவட்ட ஊராட்சி இணை இயக்குநர் உமா சங்கர் பாதிக்கப்பட்ட மலை கிராமங்களுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.