காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே கடந்த 6ஆம் தேதி காணாமல் போன கர்ப்பிணி பெண், கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி தேவி திருமங்கலத்தில் வசிக்கும் பாலாஜி என்பவரின் வீட்டில் பூ எம்ராய்டரிங் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற தேவி வீடு திரும்பாததால், முருகன் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று திருமங்கலம் பகுதியில் கழிவு நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கால்வாய் அடைப்பை சரி செய்த போது சடலம் இருப்பது தெரியவந்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
கால்வாய் சிலாபுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த தேவியின் சடலத்தை மீட்ட போலீசார் தேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.