ஓடும் ரயிலில் மதுபோதையில் மத்திய ரிசர்வ் போலீஸார் தாக்கியதாகக் கூறி ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப்பெட்டியில் ஏறிய சுமார் 10 மத்திய ரிசர்வ் போலீஸார், கழிவறை அருகே நின்றுக் கொண்டு அங்கு பயணிகளை அனுமதிக்காததோடு, கேள்வியெழுப்பிய ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஜோலார்பேட்டையை ரயில் வந்தடைந்ததும் கீழே இறங்கிய பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகளை சமாதானப்படுத்திய ரயில்வே போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸாரை வேறொரு ரயிலில் அனுப்பி வைத்தனர்.