நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி பசுமையாக மாறியுள்ளதால் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், வனப்பகுதிக்குள் Wildlife Safari செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சஃபாரி வாகனத்திற்காக பல மணி நேரம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால் ஆன்லைனில் பதிவு செய்ய வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.