மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது
வாக்கு எண்ணிக்கையில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன
காலை 8.30 மணி முதல் EVM-களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் போர்டில் எழுதிப் போடப்படும் - தேர்தல் ஆணையம்
தபால் வாக்குகள் குறைவாக உள்ள தொகுதிகளில் EVM-களில் பதிவான வாக்குகள் முன்கூட்டியே எண்ணப்பட வாய்ப்பு
தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 14 மேஜைகள் வீதம் அமைப்பு
ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி
மக்களவைத் தேர்தலில் 8,360 வேட்பாளர்கள் போட்டி; இதில் 47% பேர் சுயேச்சை வேட்பாளர்கள்
7 கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்தனர்