கன்னியாகுமரி என்றுமே தனது இதயத்திற்கு நெருக்கமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி பயணம் மற்றும் தியான அனுபவம் குறித்து தனது இணைய தள பக்கத்தில் எழுதியுள்ள மோடி, விவேகானந்தர் பாறையில், முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் ஸ்ரீ ஏக்நாத் ரானடே விவேகானத்தருக்கு நினைவிடம் கட்டியபோது சிறிது காலம் அவருடன் கன்னியாகுமரியில் நாட்களை செலவிட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.
பாரதத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி, அன்னை சக்தியின் பீடம் எனவும் புனித நதிகளால் கலக்கப்பட்ட கடல்கள் சங்கமிக்கும் பகுதி என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டமைப்பதில் ஊக்கசக்தியாக விளங்கும் கன்னியாகுமரி, பாரதத்தின் ஒற்றுமை உணர்வை மேலோங்கச் செய்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அழகிய தமிழ் மொழியின் கிரீடத்தில் வைரக்கல்லாக ஜொலிக்கும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் சிலைக்கு மரியாதை செய்தது பெருமை அளிப்பதாகவும் பிரதமர் எழுதியுள்ளார்.