தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெண்கள் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாகனம் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, குடிநீர், 24 மணி நேர தடை இல்லா மின்சாரம் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகளாக நடைபெறும் வாக்குகள் எண்ணிக்கையில் தபால் ஓட்டுக்கு 7 மேசைகளும் மின்னணு வாக்கு எண்ணிக்கைக்கு 94 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.