திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் அருகே உள்ள கல்துறை கிராமத்தில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட முப்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 கார்கள், 20 பைக்குகள், 4 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக கீரனூர் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சேவல் சண்டையை ஏற்பாடு செய்த நவீன்குமார், மகேந்திரன் ஆகியோரை மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.