இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏப்ரல் 14 முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் மீனவர்கள் விசைப்படகுகளை பழுதுபார்த்து வரும் நிலையில், படகுகளை சோதனை செய்த அதிகாரிகள் ஒரு படகின் எண்ணை மற்றொரு படகில் எழுதி முறைகேட்டில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக படகின் விபரங்கள் அடங்கிய QR Code ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
மேலும், அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்கள் பொருத்தப்பட்டால் படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.