கன்னியாகுமரி மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், கரைக்கு திரும்பிய ஏராளமான விசைப்படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் எஞ்சிய விசைப்படகு மீனவர்களையும் இன்று இரவுக்குள் கரை திரும்ப மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. 60 நாட்கள் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.