சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் வேலை செய்யும் தங்களை மேற்பார்வையாளர்கள் மரியாதை இல்லாமல் தகாத வார்த்தையில் பேசுவதாக கூறி ஒப்பந்த முறையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒப்பந்ததாரர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்ட நிலையில், புகாருக்குள்ளான மேற்பார்வையாளர்களான மனோஜ்குமார், துரைசிங்கம் ஆகியோரை பணி நீக்கம் செய்வதாக ஒப்பந்ததாரர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.