திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டியில், தனது உறவினரின் இறப்புச் சான்றிதழுக்காக அணுகியவரிடம், ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் சான்றிதழ் தருவேன் என அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமச்சந்திரன் கறாராக கூறும் வீடியோ இணையத்தில் பரவும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.