சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து வனத்துறையினர் இரவு நேரத்தில் ட்ரோன்களில் கேமராவை பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அரசமரத்தூரில் பசு மன்றும் கன்றுகளை மர்ம விலங்கு கடித்த நிலையில் அது சிறுத்தையாக இருக்கலாம் என கூறப்பட்டதால் மாலை நேரத்தில் சிறுவர்களை வெளியே அனுப்ப வேண்டாம் என வனத்துறையினர் கிராமப் பகுதிக்கு நேரடியாகச் சென்று எச்சரிக்கை விடுத்தனர்.