நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டின் விவேகானந்தா மைதானத்தில் 256 சிறார்களின் அரங்கேற்றமாக பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
வள்ளி கும்மியாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இதுபோன்ற 47 அரங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும் 6000க்கும் மேற்பட்டவர்கள் தற்போது இந்த ஆட்டத்தில் முழு பயிற்சி பெற்றுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.