சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டாமல், வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் எவ்வாறு நடவு செய்ய வேண்டுமென வனத்துறை அதிகாரிகளுக்கு தனியார் அமைப்பு பயிற்சியளித்தது.
சுமார் 500 மரங்களை இவ்வாறு மறு நடவு செய்திருக்கும் கோவையைச் சேர்ந்த க்ரீன் கேர் அமைப்பினர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்ட இருந்த மரத்தை வேருடன் அகற்றி செம்மஞ்சேரியில் ஒரு பூங்காவில் நட்டு வைத்து செயல் விளக்கம் அளித்தனர்.