சிதம்பரம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நேற்றிரவு கடலூரில் இருந்து வந்த அரசு டவுன் பஸ் மீது பைக் மோதியதில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த குத்தாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கிரிவளவன், மற்றும் கலைச்செல்வன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சிலர் போலீசாரிடம் நள்ளிரவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போலீசாரின் கண்ணெதிரிலேயே பேருந்தை உடைத்ததால் 2மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.