கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால், வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் குருசடி உள்ளிட்ட இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
தீயணைப்புத் துறையினரும் போலீஸாரும் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தினர்.
இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாம்பார்புரம் பகுதியில் ஹோட்டல் ஒன்றின் பெயர்ப்பலகை திடீரென்று உடைந்து கார் மீது விழுந்ததில், அதில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.