உதகையில் கடந்த 10 ஆம் தேதி துவங்கிய மலர் கண்காட்சிகள் இன்றுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாபயணிகள் மலர்களை காண குவிந்தனர்.
அரசு தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 126 ஆவது மலர் கண்காட்சியில், டிஸ்னி வேர்ல்ட், மலை ரயில், காளான், வயலின், மிக்கி மவுஸ் உள்ளிட்ட அலங்கார வடிவமைப்புகள் மலர்களால் அமைக்கப்பட்டிருந்தது.
ரோஜா பூங்காவில் நடைபெறும் 19வது ரோஜா கண்காட்சியையும் ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.