நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 18,19, 20 ஆகிய தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினங்களில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.
மழையை எதிர்கொள்ள தீயணைப்பு, காவல், வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.