கோவை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு சாலை நடுவே படுத்திருந்த வாலிபர் மீது பேருந்தை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதுடன், உயிருக்கு போராடியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கத்தவறிய ஆம்னி பேருந்து ஓட்டுநர் சிவராஜை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரத்த காயத்துடன் சாலையில் கிடந்த இளைஞரை 2 பேர் சேர்ந்து தூக்கி அருகில் இருந்த தடுப்பு சுவர் மீது படுக்க வைத்துவிட்டு பேருந்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியது சி.டி.டி.வி காட்சிகள் மூலம் உறுதியாகியுள்ளது.
சம்பவம் நடந்து சுமார் 1 மணி நேரம் கழித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் காயத்துடன் இருந்த வாலிபரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.