மன்னார்வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டதையடுத்து வேம்பார் முதல் பெரியதாழை வரை படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன்பிடிக்க செல்லாத நிலையில், குளச்சல் மற்றும் தேங்காப்பட்டணம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஃபைபர் மற்றும் நாட்டுப்படகுகளை கரையோரம் நிறுத்தியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கன மழை எச்சரிக்கை காரணமாக கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வலைகள் மற்றும் படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.