வாணியம்பாடி அருகே சின்னவேப்பம்பட்டு நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் சரிவர விநியோகிக்கப்படுவதில்லை என்ற புகாரின் பேரில் திடீர் ஆய்வு நடத்திய கூட்டுறவு சங்க அதிகாரிகள் குழுவினர், கடை விற்பனையாளர் பிரிதிவிராஜ் 5 டன் அரிசி மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கையாடல் செய்ததாக கண்டறிந்ததை அடுத்து, அவரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.