நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மின்கம்பிகள் மீது உரசிய மரக்கிளைகளை வெட்டியபோது மின்சாரம் தாக்கி தம்பதியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
குள்ளநாயக்கன் பாளையத்தை சேர்ந்த தங்கவேல் - சரஸ்வதி தம்பதியர் விவசாய நிலத்தில் சுமார் 15 அடி உயரத்திற்கும் மேல் வளர்ந்து மின்சார கம்பிகள் மீது மோதிய யூகலிப்டஸ் மரக்கிளைகளை அகற்றும்போது மின்கம்பியில் தொரட்டிகம்பு பட்டு சரஸ்வதி மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
மனைவியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற முயன்ற கணவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.