சனாதனத்தை டெங்குவுடன் ஒப்பிட்டு பேசியவர்களால், டெங்குவையே ஒழிக்க முடியவில்லை என்று பாஜக தென் சென்னை வேட்பாளர் தமிழசை சவுந்திரராஜன் கூறினார்.
சென்னை கே.கே.நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.