விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 யானை தந்தங்களை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு காவல் துறையினர் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கணபதி சுந்தர நாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த ராம் அழகு மற்றும் செல்லையா ஆகிய இருவரையும் வனத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.