நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சேமித்து வைத்துள்ள உப்பை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ள உப்பு உற்பத்தியாளர்கள், திடீர் மழையால், உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலம் ஆகும் எனத் தெரிவித்தனர்.