யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தாம்பரம் காவல் ஆணையரக பெண் காவல் ஆய்வாளர், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் இருவர் என 3 போலீசார், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பெண் காவல் அதிகாரிகளை இழிவுப்படுத்தி சவுக்கு சங்கர் பேசியுள்ள வீடியோவால் பெண் காவலர்கள் மட்டுமின்றி பெண்கள் அனைவருமே அவமதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.