நீலகிரி மாவட்டம் கூடலூர் - கேரளா தேசிய நெடுஞ்சாலையில் காட்டின் ஒருபகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு உணவுத்தேடி செல்லும்போது சாலையோர தடுப்பு சுவரில் ஏற முடியாமல் குட்டி யானை தவித்தபடி சாலையோரம் நின்றதால் வாகனங்கள் செல்லாமல் நிறுத்தப்பட்டது
சாலை தடுப்பு சுவரில் எப்படி ஏற வேண்டும் என்று தாய் யானை சொல்லிக்கொடுத்த நிலையில் முயன்று பார்த்தும் ஏற இயலாமல் தவித்த குட்டியை , தனது தும்பிக்கையால் அரவணைத்து தாய் யானை மேலே தூக்கி விட்டதால் போக்குவரத்து சீரானது