திருச்சி உறையூரில் டியூஷன் முடிந்து தாயுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 7 வயது சிறுமி செந்தில்குமார் என்ற கால்நடை மருத்துவர் வளர்த்து வந்த ஜெர்மன் ஷெப்பர்டு நாய் கடித்து காயமடைந்தார்.
வீட்டிற்குள் இருந்த நாய் கேட் திறந்திருந்ததால் வெளியே ஓடி வந்து சிறுமியை கடித்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, புதுச்சேரியில் திங்கள் இரவு மட்டும் தெரு நாய் கடித்ததாக கூறி 5 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சேர்ந்தனர்.