தூத்துக்குடி மாவட்டம் கலைஞானபுரம் கடற்கரை பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்ததாக 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 300 கிலோ பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சரக்கு வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போலீசார் 44 மூட்டைகளில் இருந்த பீடி இலைகளை வாகனத்துடன் பறிமுதல் செய்து ஓட்டுனரை கைது செய்ததாக தெரிவித்தனர்.