ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கிய நிலையில், வாக்காளர்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.
175 சட்டமன்ற தொகுதிகள் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலுக்காக 46 ஆயிரத்து 389 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்முறை வாக்காளர்கள் அதிகளவில் சென்று வாக்களித்தனர். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், உள்ளிட்ட நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.