விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பல்லரிப்பாளையம் வழியாகச் சென்ற தனியார் பேருந்தை மறித்த போதை ஆசாமிகள் சிலர் தங்களது பைக்கை உரசுவது போல வந்ததாகக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களில் ஒருவர் பேருந்தின் கண்ணாடியை கல்லால் உடைத்ததால், உள்ளே அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.